News September 26, 2025

ஏமாற்று வேலையில் தேர்ந்தவர் செந்தில் பாலாஜி: EPS

image

மழைக்கே அடங்காத மக்கள் கூட்டம், After all ஸ்டாலின் அரசின் 10 ரூபாய் முன்னாள் அமைச்சர் ஏவும் அடக்குமுறைகளுக்கு அடங்கிவிடுமா என்று EPS காட்டமாக கேட்டுள்ளார். கரூரில் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஒட்டுமொத்த ஏமாற்று வேலைகளை கற்று தேர்ந்தவர் செந்தில் பாலாஜி என்று விமர்சித்தார். மின் துறையில் மின் மாற்றி வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளதாகவும் EPS குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News September 26, 2025

இனி பணம் அனுப்ப OTP மட்டும் போதாது

image

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை RBI வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி Two-factor authentication முறை பின்பற்றப்படும். அதாவது, ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும்போது வழக்கம்போல் முதலில் OTP-ஐ உள்ளிட வேண்டும். பின்னர், உங்களின் பாஸ்வேர்டு, PIN நம்பர், கைவிரல் ரேகை இவற்றில் ஏதாவது ஒன்றை 2-வதாக உள்ளிட்டால் மட்டுமே பணம் அனுப்ப முடியும். இந்த நடைமுறை 2026, ஏப்.1 முதல் அமலுக்கு வருகிறது.

News September 26, 2025

இதுக்கு ஒரு தீர்ப்பு கொடுத்துட்டு போங்க..

image

எங்க அப்பாக்கு லவ் மேரேஜ் பண்றதுலலாம் பிரச்னை இல்ல, ஆனா அவர விட என் லவ்வர் கம்மியா சம்பளம் வாங்குறதுதான் பிரச்னை என்று பெண் ஒருவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். சம்பளம் குறைவு என்பதால் எதிர்கால குடும்ப நிலையை கருத்தில்கொண்டு, தனது தந்தை முடிவெடுத்ததாகவும் அப்பெண் கூறுகிறார். இது அப்பெண்ணை சிந்திக்க வைக்க, என்ன முடிவெடுக்கலாம் என குழம்பியுள்ளாராம். நல்ல முடிவா நீங்க கமெண்ட்ல சொல்லுங்க.

News September 26, 2025

BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்..

image

சரியாக தேர்தல் பணி செய்யாத, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முன்னெடுக்காத DMK மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலின் கடுமையாக எச்சரித்திருந்தார். இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து EX MLA நா.கார்த்திக் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் துரை.செந்தமிழ் செல்வன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக தீர்மானக் குழு செயலாளராக கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!