News July 7, 2025
மீண்டும் சிக்குகிறார் செந்தில் பாலாஜி

2021-23-ல் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ₹397 கோடி முறைகேடு நடந்ததாக, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால், மீண்டும் ED உள்ளே வரலாம் எனவும் அது கைது வரை கூட நீள வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Similar News
News September 8, 2025
டிடிவியின் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதில்

NDA கூட்டணியில் இருந்து அமமுக விலக, தான் காரணம் என்று எந்த அடிப்படையில் டிடிவி கூறுகிறார் என தெரியவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். NDA கூட்டணியில் தலைவராக EPS-ஐ, தான் அறிவிக்கவில்லை என்றும், பூத் கமிட்டி கூட்டத்தில் EPS முதலமைச்சராக வேண்டுமென அண்ணாமலை தான் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கும் டிடிவிக்கும் எந்த தனிப்பட்ட பிரச்னையும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News September 8, 2025
இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது

ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியை ஒட்டிய இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானி கைது செய்யப்படுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிராஜ் கான் என்ற அந்த நபர், இந்திய எல்லைக்குள் நுழைவதை கண்டு முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவரை பிடித்த ராணுவம், அவரிடம் இருந்து பாகிஸ்தான் பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
News September 8, 2025
அடுத்த கிரகணம் எப்போது தெரியுமா?

நேற்றிரவு, முழு சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், அடுத்த 2 வாரத்திற்குள் மற்றுமொரு கிரகணம் நிகழவுள்ளது. இந்த மாதம் 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. சரியாக 21-ம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி, 22-ம் தேதி அதிகாலை 3.23 மணி வரை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனை இந்தியாவில் காணமுடியாது. நியூசிலாந்து & ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தெளிவாகக் தெரியும்.