News March 28, 2024
தீர்ப்பு நாளில் செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்

ED வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் வாதிட அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவற்றை இதுவரை தரவில்லை. அவை கிடைத்த பிறகு அதன் அடிப்படையில் இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
Similar News
News February 18, 2026
ஒரு மாணிக்கம் தாகூரை அடக்க முடிந்ததா? தமிழிசை

திமுக மீது கூட்டணி கட்சிகளுக்கே நம்பிக்கை இல்லை என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், டிரம்ப் & பாகிஸ்தானை அடக்குனீர்களா என கேட்கும் திமுகவால், ஒரு மாணிக்கம் தாகூரை அடக்க முடிந்ததா என சாடியுள்ளார். அத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்க முடியாத திமுகவுக்கு, பலநாடுகளுடன் குழு அமைத்து ஒப்பந்தம் மேற்கொள்ளும் PM மோடி குறித்து பேச தகுதியே இல்லை எனவும் கூறியுள்ளார்.
News February 18, 2026
BREAKING: மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் எப்போது வரும் என அரசியல் கட்சிகள் காத்திருந்தன. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே, மார்ச் 16-ல் இதற்கான தேர்தல் நடைபெறும் என ECI அறிவித்துள்ளது. பிப்.26-ல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி சிவா, கனிமொழி சோமு, NR இளங்கோ, செல்வராசு, GK வாசன் & தம்பிதுரை ஆகிய 6 MP-க்களின் பதவிக்காலம் ஏப்.2-ல் முடிவடைகிறது.
News February 18, 2026
அஜித் பவார் மறைவுக்கு தமிழக பேரவையில் இரங்கல்

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மகாராஷ்டிர முன்னாள் DCM அஜித் பவார், கல்வியாளர் ராசகோபாலன் & மறைந்த MLA-க்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தெரிவிக்க, அனைத்து உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, பட்ஜெட் மீதான கேள்வி-பதில்கள் தொடங்கியுள்ளது.


