News September 30, 2025

‘செந்தில் பாலாஜி பெயரை எழுதி வைத்துவிட்டு மரணம்’

image

தவெக தொண்டரின் மரணக் கடிதத்தில் ‘செந்தில் பாலாஜியே காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. கரூர் விஜய் வருகையின்போது, போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. ஆனாலும், விஜய் ரசிகர்கள் நன்றாக வேலை செய்தனர். செந்தில் பாலாஜி நூதன முறையில் நெருக்கடி கொடுத்து, அவர் மூலம் கரூர் துயரச் சம்பவம் நடைபெற்றது. இதற்கு போலீசும் உடந்தை. எனவே அவரை கைது செய்ய வேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News September 30, 2025

டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன்: PM

image

டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு பின் இஸ்ரேல் PM நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் டிரம்பின், காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்பதாக PM மோடி பதிவிட்டுள்ளார். டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால அமைதியை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியால் மோதல் முடிவுக்கு வந்து அமைதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

RECIPE: தினை ஆப்பம் செய்வது எப்படி?

image

*தினை, இட்லி அரிசி, உளுந்து & வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும் *இதில், துருவிய தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும் *பச்சரிசியை தனியாக ஊறவைத்து, மோர் பதத்திற்கு அரைக்கவும் *இதை மிதமான தீயில் கிளறி, மாவு பசை பதத்திற்கு இறுகும் போது, உப்பு சேர்க்கவும் *இது ஆறிய பிறகு, அரைத்த ஆப்ப மாவுடன் இதனை சேர்க்கவும் *இதை மிருதுவதாக சுட்டு எடுத்தால், சுவையான தினை ஆப்பம் ரெடி. SHARE.

News September 30, 2025

விஜய் கைதாக வாய்ப்பா? நிலைமை இதுதான்

image

தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால், விஜய்யும் கைது செய்யப்படலாம் என்று பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால், அவர் கைதாக வாய்ப்பு மிக குறைவு. கரூர் துயர வழக்கில் விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை. அதுமட்டுமல்ல அவரை கைது செய்ய நினைத்தால், தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால், அவர் கைதாக வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!