News April 10, 2024
10 ஆண்டுகளில் 75,000 ஆக உயர்ந்த சென்செக்ஸ்

38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 அடிப்படை புள்ளிகளை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து படிப்படியாக உயர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, 20,000ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்து, நேற்று வர்த்தக நேரத்தில் 75,000 புள்ளிகளை கடந்து 75,124ஆக இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 50,000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
Similar News
News August 12, 2025
தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்கள்? நேரு விளக்கம்

தூய்மைப் பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறுவது வதந்தி என்று அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது என தெரிவித்த அவர் கொஞ்சம் கால அவகாசம் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 12, 2025
என் சாவுக்கு காதலனே காரணம்.. உயிரை விட்ட பெண்

‘எனது சாவிற்கு காதலன் ரமீஸும், அவரது குடும்பமுமே காரணம். மதம் மாறச் சொல்லி என்னை உடல் ரீதியாக துன்புறுத்தினார்கள்.’ கேரளா எர்ணாகுளத்தில் டீச்சர் டிரைனிங் மாணவி சோனா(23) தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய வரிகள் இவை. வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்த அவருக்கு நடந்த கொடுமைகள் அவரது உயிரையே பறித்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ், ரமீஸை கைது செய்து விசாரித்து வருகிறது.
News August 12, 2025
BREAKING: 4 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு ஒப்புதல்

ஆந்திரா, ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் ₹4,600 கோடி மதிப்பீட்டில் 4 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், உ.பி.,யின் லக்னோவில் Phase-1B மெட்ரோ திட்டத்திற்காக ₹5,801 கோடியும், அருணாச்சலில் 700 மெகா வாட் மின் திட்டத்திற்காக ₹8,146 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.