News April 28, 2025
சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,022 புள்ளிகள் உயர்ந்து 80,234 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 292 புள்ளிகள் உயர்ந்து 24,331 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, நெஸ்லே ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் பெற்றுள்ளன.
Similar News
News December 18, 2025
சபரிமலையில் இதுவரை ₹210 கோடி வருமானம்

சபரிமலையில் நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நடை திறந்து இதுவரை ₹210 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் ₹106 கோடி கிடைத்துள்ளதாகவும், மொத்த வருவாய் கடந்த ஆண்டைவிட 30% அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது. தங்கும் அறைகளுக்கு முன்பணம் செலுத்திய பக்தர்கள் அதனை பெற தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
News December 18, 2025
வரலாற்றில் இன்று

*1822 – தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர் பிறந்தநாள்.
*1856 – நவீன அணு இயற்பியலின் தந்தை ஜெ.ஜெ.தாம்சன் பிறந்தநாள்.
*2005 – சென்னையில் வெள்ள நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.
*2006 – ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
News December 18, 2025
தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை மாஃபியா: HC

கனிமவள கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை HC-ன் உத்தரவுபடி TN அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசியல், பணபலத்தை வைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தமிழகத்தில் மாஃபியா போல் செயல்படுவதாக கோர்ட் தெரிவித்தது. மேலும் ₹5 கோடிக்கு கனிமவளம் கொள்ளையடிப்படும் நிலையில், ₹5 லட்சம் அபராதம் விதிப்பதில் என்ன பயன் என்றும் HC கேள்வி எழுப்பியுள்ளது.


