News August 25, 2025
பிரதமர் மோடி வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

PM மோடியின் டிகிரி தொடர்பான தகவலை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின்(CIC) உத்தரவை, டெல்லி ஐகோர்ட் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. டெல்லி யுனிவர்சிட்டியில் 1978-ல் டிகிரி பெற்ற மோடி உள்பட அனைவரது விவரங்களை நீரஜ் என்பவர் CIC-யிடம் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அந்த தகவலை வழங்குமாறு யுனிவர்சிட்டிக்கு CIC கூறியிருந்தது. மோடியின் டிகிரி போலியானது என காங்., சாடியது கவனிக்கத்தக்கது.
Similar News
News August 25, 2025
கடலூர்: ஆயுதத் தொழிற்சாலையில் வேலை! APPLY NOW!

கடலூர் மக்களே திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 73 Tradesman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஐ.டி.ஐ அல்லது டிப்ளமோ படித்த, 18 வயது பூர்த்தி அடைந்து 35 வயதுக்கு மேற்படாதவர்கள்<
News August 25, 2025
அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் நற்செய்தி

பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற MHC மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு SC இடைக்காலத் தடை விதித்துள்ளது. MHC உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி SC-ல் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு 4 வாரத்திற்குள் TN அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News August 25, 2025
திருப்பதியில் நடிகர் ரவி மோகன்… காரணம் தெரியுமா ?

இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் திருப்பதி எழுமலையானை தரிசித்துள்ளார். சென்னையில் நாளை ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கி அவர் தயாரிக்கும் புதிய படங்களின் அறிவிப்பை வெளியிடவுள்ளார். தொடங்கும் தொழில் தழைத்தோங்க ரவி மோகன் ஏழுமலையானை தரிசித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் சபரிமலைக்கு மாலை போட்டு ஐயப்பனை தரிசித்திருந்தார்.