News August 24, 2025
ICU-வில் தமிழக மூத்த தலைவர்.. HEALTH UPDATE

CPI மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி வீட்டில், கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு ICU-வில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 100 வயதானவர் என்பதால் நரம்பியல், நுரையீரல், இதய நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
GPay, Phonepe பணத்துக்கு சிக்கலா? உடனே இதை செய்க

Gpay, Phonepe-ல தவறான நபருக்கு பணம் அனுப்பிட்டா, அத காந்தி கணக்குல எழுதவேண்டிய அவசியமில்ல. இந்த சிம்பிள் வழிகள் மூலம் பணத்த திரும்பப் பெறலாம் ▶நீங்க பணம் அனுப்புன நபரை தொடர்புகொண்டு பணத்த திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்க ▶அந்நபர் மறுக்கும் பட்சத்தில் உங்களோட வங்கியில நீங்க முறையிடலாம் ▶புகார் கொடுத்தும் வேலை நடக்கலன்னா, NPCI-யோட இலவச எண் 1800-120-1740-க்கு அழைத்து புகாரளியுங்க. SHARE IT.
News August 24, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம், நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.
News August 24, 2025
ஜாம்பவான்களின் வாரிசு… அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்

புகைப்படத்தில் உள்ள இருவரையும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இவ்விருவரின் தந்தையும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு காலம் கடந்த பெருமை சேர்த்த ஜாம்பவான்கள். பேட் வைத்திருப்பர் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யாவின் மகன் ரனுக், சுழற்பந்து வீசுபவர் முத்தையா முரளிதரனின் மகன் நரேன். உள்ளூர் போட்டியில் இருவரும் விளையாடிய புகைப்படம் இது. இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளிலேயே உள்ளது.