News October 4, 2025
மூத்த அரசியல் தலைவர் காலமானார்

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமேஷ்வர் துடி (62) உடல்நலக் குறைவால் காலமானார். ராஜஸ்தான் அரசியலில் முக்கிய பங்காற்றிய இவர் MP-யாகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டதால் 2023-ல் இவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் சுயநினைவற்று கடந்த 2 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், அவர் உயிர் பிரிந்துள்ளது. RIP
Similar News
News April 5, 2026
திருப்பத்தூர்: இனி ‘ஒரிஜினல்’ ஆதார் தேவையில்லை!

திருப்பத்தூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News April 5, 2026
3 நாள்களில் 3,000 வேட்புமனு தாக்கல்

மார்ச் 30-ல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நாளையுடன் (ஏப்.6) முடிவடைகிறது. விடுமுறை நாள்கள் தவிர்த்து 3 நாள்கள் வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 3,000 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 1,639 வேட்பு மனுக்கள் வந்துள்ளன. நாளை காலை 11-3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்படும். சரியாக 3 மணிக்கு அலுவலக நுழைவாயில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 5, 2026
அவிநாசியில் தாமரை மலருமா? எஸ்.பி.வேலுமணி பளீச்

அதிமுக கோட்டையாக கருத்தப்பட்ட அவிநாசி தொகுதியில் பாஜகவின் எல்.முருகன் களமிறங்குகிறார். ஆனால், இதுவரை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த மக்கள், இம்முறை தாமரை சின்னத்தில் வாக்களிப்பார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரட்டை இலை போல தாமரையும் அனைத்து மக்களுக்கும் அறியப்பட்ட சின்னம் என்பதால், மக்களிடம் எந்த குழப்பமும் வராது எனக் கூறிய எஸ்.பி.வேலுமணி, கொங்கு மண்டலத்தை அதிமுக கைப்பற்றும் என்றார்.


