News April 3, 2025

ஜேடியு கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் விலகல்

image

வஃக்பு சட்ட (திருத்த) மசோதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நிதீஷ்குமாரின் ஜேடியுவில் இருந்து 2 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர். மக்களவையில் நேற்று அந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் ஜேடியு கட்சி ஆதரவு அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜேடியு சிறுபான்மை பிரிவு தலைவர் முகமது அஸ்ரப் அன்சாரி, மூத்த தலைவர் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் விலகியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து?

Similar News

News April 4, 2025

பங்குச்சந்தைகள் கடும் சரிவு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவினை சந்தித்தன. நிஃப்டி இன்று 345 புள்ளிகளை இழந்து 22,904 புள்ளிகளிலும் சென்செக்ஸ் இன்று 930 புள்ளிகளை இழந்து 75,364 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதனை தூக்கி சாப்பிடும் விதமாக, Midcap & SmallCap பங்குகள் தலா 3% மதிப்பை இழந்தன. டிரம்ப் விதித்த வரியின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

News April 4, 2025

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு… இன்று முதல் அமலுக்கு வந்தது

image

தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய Y பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு Y, Z என பல பிரிவுகளில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. அந்த வரிசையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று முதல் விஜய்க்கு 8 – 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவார்கள்.

News April 4, 2025

8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

தமிழ்நாட்டில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு டிஜிபி பொறுப்பை ரூபேஸ் குமார் மீனா கூடுதலாக கவனிக்க உள்ளார். தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வாலும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக சந்தோஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து துணை ஆணையராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!