News August 28, 2025
மூத்த தலைவர் காலமானார்.. CM ஸ்டாலின் இரங்கல்

திமுக மூத்த தலைவர் <<17542026>>ஆர்.சின்னசாமி<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு செய்தியை அறிந்து வருத்தமடைந்ததாக தெரிவித்த ஸ்டாலின், தருமபுரி மாவட்ட வளர்ச்சிக்கு பெரும் பணியாற்றியவர் எனக் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் முதுபெரும் உறுப்பினராக இருந்து வழிகாட்டிய சின்னசாமியின் மறைவு கட்சிக்கு பேரிழப்பு என்றும் தெரிவித்துள்ளார். சின்னசாமி உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Similar News
News March 17, 2026
புதுச்சேரி தேர்தல் கண்காணிப்புப் பணிகள் ஆய்வு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன், தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, ‘1950’ என்றை கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் ‘cVIGIL’ செயலி மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து ஆய்வு செய்த அவர், புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News March 17, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்.. அதிர்ச்சி

<<19394504>>திமுகவின் சமரச பேச்சுவார்த்தை<<>> தோல்வியடைந்ததால், கூட்டணியிலிருந்து விலக தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் தொகுதிகளை கேட்டு விசிக, சிபிஐ, சிபிஎம் ஏற்கெனவே அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வேல்முருகனின் விலகல் முடிவு என்பது திமுக கூட்டணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
News March 17, 2026
பாஜகவில் இணைந்த கம்யூனிஸ்ட் MLA

கேரளாவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநில அரசியலில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் MLA முகுந்தன் பாஜகவில் இணைந்துள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் தரவில்லை என்றால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என கூறியதால் சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், நட்டிகா தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் களமிறங்குவார் என கூறப்படுகிறது.


