News August 23, 2025
மூத்த தலைவர் மறைவு..CM ஸ்டாலின் இரங்கல்

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதாகர் ரெட்டி தனது வாழ்க்கையை மக்களின் போராட்டங்களுக்காக அர்ப்பணித்ததாக குறிப்பிட்ட அவர், அவரது மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிக்கான போராட்டத்திற்கு அவரது வாழ்க்கை தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 16, 2026
பாண்டவர் படை போல NDA வெற்றி பெறும்: TTV தினகரன்

எண்ணிக்கையில் திமுக கூட்டணி அதிகமாக இருந்தாலும், NDAதான் பலமான கூட்டணி என TTV தினகரன் தெரிவித்துள்ளார். தீய சக்தியான துரியோதனன் பக்கம் படைகள் அதிகமாக இருந்தாலும் பாண்டவர்கள் வெற்றி பெற்றது போல் NDA வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தங்கள் கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
வரலாற்றில் இன்று

➤ தேசிய தடுப்பூசி தினம்
➤தேசிய பாண்டா தினம்
➤2001 – சீனாவின் சிஜியாசுவாங் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 108 பேர் கொல்லப்பட்டனர்,
➤2005 – இஸ்ரேல் எரிக்கோவை அதிகாரபூர்வமாக பாலத்தீனியர்களிடம் ஒப்படைந்தது.
➤2006 – மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது.
News March 16, 2026
5 ஆண்டுகளில் 6,00,00,00,00,000 திமுக ஊழல்: அன்புமணி

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு ஆட்சியாளர்களுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோலாக சென்று கொண்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். அனைத்துத் துறைகளிலும் ஊழல்கள் தான் தழைத்தோங்கியுள்ளது. குற்றம்சாட்டிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடிக்கு திமுக ஊழல் செய்து சாதனை படைத்திருப்பதாகவும் சாடியுள்ளார். திமுக ஆட்சியை அகற்றுவதன் மூலமே TN-க்கு உண்மையான முன்னேற்றத்தை தர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


