News April 10, 2024
மோடியை புறக்கணித்த பாஜக மூத்த தலைவர்கள்

உத்தர பிரதேசத்தின் பிலிப்பித்தில் பிரதமர் மோடியின் கூட்டத்தை பாஜக மூத்த தலைவர்கள் மேனகா காந்தி, மகன் வருண் காந்தி புறக்கணித்தது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிலிப்பித் எம்பியாக 1996 முதல் இருவரும் மாறி மாறி பதவி வகித்தனர். இம்முறை வருண் காந்திக்கு பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் உள்ள நிலையில், மோடியின் நேற்றைய கூட்டத்தை 2 பேரும் புறக்கணித்தனர்.
Similar News
News April 9, 2026
உங்களுக்கு பிரச்னை என்றால் சுந்தர் சி வருவார்: குஷ்பு

திமுக MLA PTR-ஐ தொகுதி மக்களே பார்க்க முடியாத சூழலே 10 ஆண்டுகளாக உள்ளது என குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி ஆதரித்து பேசிய அவர், இனி உங்களுக்கு பிரச்னை என்றால் அடுத்த 10-வது நிமிடத்தில் சுந்தர் சி இருப்பார் என தெரிவித்தார். உங்கள் கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க 23-ம் தேதி சுந்தர் சிக்கு ஓட்டு போடுங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 9, 2026
மீண்டும் போர்.. இரவில் அதிர்ச்சி கொடுத்த ஈரான்

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையிலும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் பெய்ரூட் ஹிஸ்புல்லா குழுவை குறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதல் 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இந்நிலையில் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் போர் நிறுத்தத்தில் இருந்து விலக நேரிடும் என அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News April 9, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 9, பங்குனி 26 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.


