News May 7, 2025

பாஜக மூத்த தலைவர் நரேந்திர சலுஜா காலமானார்

image

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நரேந்திர சலுஜா (58) மாரடைப்பால் காலமானார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்தார். சேஹோரில் திருமண விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஜகவில் சேருவதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கமல்நாத்திற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

Similar News

News November 23, 2025

ஹோட்டல் ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

image

ஹோட்டல் ஊழியர்கள் தவறாமல் Enteric காய்ச்சல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்காக தங்களது பணியாளர்களுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் தலா ₹500 கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

போதை – பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும்: PM மோடி

image

போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் PM மோடி வலியுறுத்தியுள்ளார். போதைக் கடத்தல் தடுப்பை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற அவர், ஃபென்டனில் போன்ற போதைப் பொருள்கள் பரவலையும், போதை-பயங்கரவாத கூட்டையும் ஒழிக்க வேண்டுமென்றார். மேலும், பயங்கரவாதத்தை வளர்க்கும் நிதி மூலங்களை தடுக்க முயற்சிக்கவும் அழைப்பு விடுத்தார்.

News November 23, 2025

ராசி பலன்கள் (23.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!