News June 17, 2024
பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ் காலமானார்

கர்நாடக மாநில பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், மாரடைப்பால் காலமானார். பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் கர்நாடக அரசு உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பாஜகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 25, 2026
BREAKING: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

23 பேர் கொண்ட அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி தொகுதியில் EPS மீண்டும் களமிறங்க உள்ளார். நத்தம்- நத்தம் விஸ்வநாதன், வேப்பனஹள்ளி- KP முனுசாமி, ராயபுரம்- ஜெயக்குமார், தொண்டாமுத்தூர்- SP வேலுமணி, திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன், நன்னிலம் – காமராஜ், மதுரை மேற்கு- செல்லூர் ராஜு, மயிலம்- CV சண்முகம், குமாரபாளையம்- தங்கமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
News March 25, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,800 உயர்வு!

சென்னையில் 22 கேரட் தங்கம் விலை இன்று(25.03.2026) கிராமுக்கு ₹350 அதிகரித்து ₹13,600-க்கு விற்பனையாகிறது. 8 கிராம் கொண்ட சவரன் ₹2,800 உயர்ந்து, ₹1,08,800 ஆக உயர்ந்துள்ளது. <<19469578>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 5% வரை உயர்ந்துள்ளதால் நம்மூர் சந்தையிலும் தங்கம் விலையானது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
News March 25, 2026
தவெக வேட்பாளர்கள் பட்டியல்.. விஜய்யின் வியூகம்

தவெகவில் முதற்கட்டமாக 110 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வரும் 27-ம் தேதி விஜய் வெளியிட உள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 110 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். அதில், EX அமைச்சர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் பலர் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


