News September 24, 2025

வான் படையின் சீனியர் வீரனுக்கு ஓய்வு

image

6 தசாப்தங்களாக இந்திய விமானப்படையில் பணியாற்றிய MiG-21 ரக சூப்பர் சோனிக் போர் விமானங்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள பிரியாவிடை நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தளபதி ஏபி சிங் உள்ளிட்ட பல அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ரஷ்ய தயாரிப்பான MiG-21 கடந்த 1963-ல் படையில் சேர்க்கப்பட்டது. 1965 முதல் இந்தியாவின் அனைத்து போர்களிலும் இவை பயன்படுத்தப்பட்டன.

Similar News

News September 24, 2025

உங்கள் குழந்தைக்கு இந்த பிரச்னைகள் இருக்கா?

image

குழந்தைகளின் நடவடிக்கைகளை வைத்தே அவர்களது உடம்பில் சத்து குறைபாடு இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கலாம். ➤குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்தால் வைட்டமின் சி குறைபாடு இருக்கலாம் ➤Zinc & இரும்பு சத்து குறைபாடுள்ள குழந்தைகள் சத்தான உணவுகளை சாப்பிடமாட்டார்கள் ➤முடி உதிர்ந்தால் Zinc & பயோட்டின் குறைபாடு ➤உதடுகள் வறண்டிருந்தால் இரும்பு சத்து குறைபாடு இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.

News September 24, 2025

ஒருக்கா மட்டும் அண்ணன் பேச்ச கேளு: சீமான்

image

விஜய்யை எதிர்த்து போட்டியிடவா நான் அரசியல் செய்கிறேன் என்ற சீமான், இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது என்றும் விமர்சித்துள்ளார். அடுத்தவன் பேச்சை கேட்காதே, அண்ணன் பேச்சைக் ஒருமுறை கேளு என விஜய்க்கு அறிவுறுத்திய சீமான், உனக்கு தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள் என்றார். மேலும், திடீரென மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பற்றி விஜய் பேசுவது, மோடி தமிழில் திருக்குறள் சொல்வதுபோல உள்ளது என்றும் கடுமையாக சாடினார்.

News September 24, 2025

அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா

image

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், வங்கதேச அணிக்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. கில், அபிஷேக் சர்மா இணை சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. முதல் 3 ஓவர்களுக்கு 17 ரன்கள் எடுத்திருந்த இந்தியா, அடுத்த 3 ஓவர்களில் 55 ரன்களை குவித்தது. தனது அதிரடியான ஆட்டத்தால் அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி (60 ரன்கள்) களத்தில் உள்ளார். கில், (29 ரன்கள்), ஷிவம் துபே (2 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

error: Content is protected !!