News February 12, 2025
செங்கோட்டையன் தனியாக ஆலோசனை?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739341088659_55-normal-WIFI.webp)
அதிமுக உட்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ் பாராட்டு விழாவை அவர் புறக்கணித்த நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
Similar News
News February 12, 2025
எனது தாத்தா ஒரு காதல் மன்னன்: சிரஞ்சீவி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739350737569_1173-normal-WIFI.webp)
நடிகர் சிரஞ்சீவி தனது தாத்தாவை வைத்து Fun செய்துள்ளார். வீட்டில் 2 பாட்டிகள் இருந்த போதும், தாத்தாவுக்கு போர் அடித்தால், அவர் வேறு பெண்களை தேடிச் செல்வார் எனவும், அவர் ஒரு காதல் மன்னன் என்றும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே, தாத்தாவைப் போல் வந்து விடாதே என்று கூறி தன்னை வளர்த்ததாகவும், இருப்பினும் அவர் செய்த சில நல்ல காரியங்களால் தான் இந்த நிலைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News February 12, 2025
பெண் குழந்தைகள் குறித்து சிரஞ்சீவி சர்ச்சை கருத்து
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739350126665_1173-normal-WIFI.webp)
பெண் குழந்தைகள் குறித்து சிரஞ்சீவி பாலின பாகுபாடான கருத்து கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. வீட்டில் பேத்திகளோடு இருக்கும் போது, பெண்கள் விடுதிக்குள் இருப்பது போன்று தோன்றுவதாகவும், அதனாலேயே ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து, தங்களது மரபைத் தொடர வழி செய் என்று ராம் சரணிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், ராம் மீண்டும் மகளை பெற்றெடுப்பாரோ என பயமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News February 12, 2025
தீர்ப்புக்கு பின் ஓபிஎஸ் அறிவித்தது இதுதான்..
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739345455030_55-normal-WIFI.webp)
அதிமுக வழக்கில் தீர்ப்பு வெளியான உடன், முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓபிஎஸ் கூறியதால், அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அவர் என்ன அறிவிக்கப் போகிறார்? செங்கோட்டையன் தலைமையில் புதிய அணியா? என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அப்படி எதையும் அவர் அறிவிக்கவில்லை. மாறாக, அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட ஜெ.,வை தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.