News March 31, 2025
செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்?

செங்கோட்டையன் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் இணைக்க இபிஎஸ் மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால், செங்கோட்டையனை வைத்து அவர்களைக் கட்சியில் இணைக்க BJP முயல்வதாக கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ரகசியமாக டெல்லி சென்று திரும்பிய அவர், இன்று மீண்டும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News April 3, 2025
GTயின் சூப்பர்ஸ்டாரான ‘தமிழர்’ சாய் சுதர்ஷன்!

IPL தொடரில், சாய் சுதர்ஷன் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர், தனது கடைசி 7 IPL இன்னிங்சில் 65(39), 84*(49), 6(14), 103(51), 74(41), 63(41) & 49(36) என ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். GT அணிக்கு முக்கிய பங்காற்றி வரும் சாய் சுதர்ஷன், அந்த அணியின் சூப்பர்ஸ்டார் வீரராகவே மாறியுள்ளார். சுதர்ஷனை போன்ற வீரர் CSKல் இருந்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
News April 3, 2025
திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டையுடன் பேரவைக்கு வருகை

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்கள் கருப்பு பட்டை அணிந்தவாறு சட்டப்பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர். இந்த மசோதா நேற்று இரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
News April 3, 2025
ட்ரெண்டிங்கில் ‘Vintage RCB’!

‘CSKவை அதன் கோட்டையிலேயே அடிச்சாச்சு.. ஈ சாலா கப் நமதே’ என RCB ஃபேன்ஸின் கொண்டாட்டம், நேற்று தலைகீழாக மாறியது. சொந்த கிரவுண்டிலேயே RCB, GTயிடம் தோல்வியடைந்தது. உடனே மற்ற டீம் ஃபேன்ஸ், இதுதான் சரியான டைம் என ‘Vintage RCB’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கலாய்க்க தொடங்கிவிட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், கிண்டலடிப்பவர்களின் டீம் இன்னும் பாய்ண்ட்ஸ் டேபிளில் RCB அணிக்கு கீழ் தான் இருக்கிறது..!