News September 5, 2025
BREAKING: இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் வார்னிங்

கட்சியில் இருந்து விலகியவர்களை(OPS, சசிகலா, TTV) மீண்டும் இணைக்க EPS-க்கு செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார். 2026 தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலில் சந்தித்தால்தான் வெற்றி பெற முடியும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுவதாகவும் கூறியுள்ளார். 10 நாள்களுக்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால் ஒத்த கருத்துடைய தலைவர்களை ஒன்றிணைத்து, ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News September 7, 2025
9 முறை MLAவுக்கே இந்த நிலைமையா? ஓயாத சர்ச்சை

தமிழக அரசியல் வரலாற்றில் அதிக முறை MLA-ஆக இருந்தவர்கள் பட்டியலில், கருணாநிதி (14முறை), துரைமுருகனுக்கு(10) அடுத்த இடத்தில் இருப்பவர் செங்கோட்டையன்(9). அப்படிப்பட்ட மூத்த அரசியல்வாதியான அவரை, விளக்கம் கூட கேட்காமல் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசு பொருளாக தற்போதுவரை உள்ளது. மூத்த நிர்வாகியை அதிமுக கையாண்ட விதம் சரியா? தவறா?
News September 7, 2025
பிரபல நடிகை அனுஷ்கா மோனி கைது

மும்பையில் பாலியல் புகாரில் பெங்காலி நடிகை அனுஷ்கா மோனி மோகன் தாஸ்(41) கைது செய்யப்பட்டுள்ளார். நடிகைகளை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் கையும் களவுமாக அவர் சிக்கியுள்ளார். வாடிக்கையாளர் போன்று 2 பேரை அனுப்பி, அவர்களிடம் பணம் பெற வந்த நடிகை அனுஷ்காவை போலீஸ் கைது செய்துள்ளது. மேலும், அவரிடம் சிக்கி இருந்த நடிகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
சீன அதிபரை சந்திக்கும் டிரம்ப்..!

தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் டிரம்ப் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சீனாவின் பிடியில் இந்தியா, ரஷ்யா சென்றுவிட்டதாக டிரம்ப் விமர்சித்து இருந்த நிலையில், இச்சந்திப்பு நடைபெறுவதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.