News March 15, 2025

கட்சியை விட்டு விலகும் செங்கோட்டையன்?

image

EPS – செங்கோட்டையன் இடையேயான பிளவு இன்று வெட்ட வெளிச்சம் ஆகிவிட்ட நிலையில், செங்கோட்டையனின் பேச்சு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. <<15773361>>தான் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர் எதைக் கூறியிருக்கிறார்<<>> என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கட்சியை விட்டு விலகி வேறு பாதையில் பயணிக்க இருக்கிறாரா, அல்லது கட்சிக்குள்ளேயே கலகம் செய்ய காத்திருக்கிறாரா? காலம் பதில் சொல்லும்.

Similar News

News March 16, 2025

WPL: இவர்களுக்கே ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருது

image

WPL பைனலில் DC அணியை வீழ்த்தி, MI அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த MI அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார். அத்துடன், இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த MI அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார். மேலும், நாட் சீவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.

News March 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 208 ▶குறள்: தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று. ▶பொருள்: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

News March 16, 2025

365 நாட்களுக்கு BSNL அசத்தல் ரீசார்ஜ் ப்ளான்!

image

குறைந்த செலவில் தங்கள் சிம்மை நீண்ட காலத்திற்கு ஆக்டிவாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு BSNL ஒரு அசத்தல் திட்டத்தை வழங்கியுள்ளது. ₹1,198க்கு ரீசார்ஜ் செய்தால் (ஒரு நாளைக்கு ₹3.28) 365 நாட்கள் செல்லுபடியாகும். ஒவ்வொரு மாதமும் எந்த நெட்வொர்க்கிற்கும் 300 நிமிடங்கள் வரை இலவசமாக பேசலாம், 30 இலவச SMS, மாதத்திற்கு 3GB டேட்டா பெறலாம். 2வது சிம்மாக BSNL பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த ப்ளானாகும்.

error: Content is protected !!