News September 19, 2025
செங்கோட்டையன் விவகாரம்: அதிமுக அவசர ஆலோசனை

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் AK செல்வராஜ் தலைமையில் கோபி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. செங்கோட்டையனுக்கு மாற்றாக நியமிக்கப்பட்ட இவரை கடந்த வாரம் செங்கோட்டையனின் ஆதரவாளராக இருந்த MLA பண்ணாரி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு அளித்திருந்தனர். கட்சியிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படலாம் என பேசப்பட்டு வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் கவனத்தை பெற்றுள்ளது.
Similar News
News September 19, 2025
பிரபல பாடகர் ஜுபின் கார்க் காலமானார்

பிரபல பாடகர், இசையமைப்பாளர் மற்றும் அசாமின் கலாசார ஐகானுமான ஜுபின் கார்க் (52) சிங்கப்பூரில் விபத்தில் உயிரிழந்தார். ஸ்கூபா டைவிங் செய்ய கடலுக்குள் சென்றவர் தவறி விழுந்து மரணமடைந்தார். வடகிழக்கின் ராக்ஸ்டாரான ஜுபின், அசாமி, இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்பட 40 மொழிகளில் மொத்தம் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் உயிரே, கலக்கல், குத்து, உற்சாகம் படங்களுக்கு பாடியுள்ளார்.
News September 19, 2025
BREAKING: விஜய் முக்கிய அறிவிப்பு

நாகையில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில், தொண்டர்களுக்கு தவெக தலைமை பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. *சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்க வேண்டாம். *கர்ப்பிணிகள், கைக்குழந்தைகள், முதியவர்கள், சிறாரை கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம். * விஜய் வாகனத்தை பின் தொடர வேண்டாம். *விஜய் வருகையின்போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். *சட்டம் – ஒழுங்கை மீறாமல் கண்ணியமாக நடக்க வேண்டும்.
News September 19, 2025
ஆயுதபூஜை விடுமுறை.. செப்.22 முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே செப்.22, 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE.