News April 24, 2025
‘எடப்பாடியாரை வணங்கி’ செங்கோட்டையன் புகழாரம்!

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே கருத்துவேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவையில் இன்று ‘எடப்பாடியாரை வணங்கி’ என செங்கோட்டையன் பேசியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் இபிஎஸ் நல்லாட்சி நடத்தியதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது, இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்ததை போல் இருப்பதாகப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 22, 2025
டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று, கவுகாத்தியில் தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடத்த முதல் டெஸ்டில் தோல்வியை சந்தித்ததால், தொடரை சமன் செய்ய இந்த போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால், அவருக்கு பதில் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். அதேபோல் கில் இடத்தில் சாய் சுதர்சனம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 22, 2025
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: EPS

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்றும், அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள CM ஸ்டாலின், ராகுல், சோனியா காந்தியிடம் பேசி சுமுகமான முடிவை எடுக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 22, 2025
வணிகம் 360°: US நிறுவனத்துடன் கைகோர்க்கும் TCS

*பிரபல உணவுப்பொருள் நிறுவனமான வில்மருடனான பங்குகளை அதானி குழுமம் முழுமையாக விற்றது. *நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான TCS, இந்தியா முழுவதும் AI தரவு சேமிப்பகங்களை அமைக்கும் திட்டத்தை அமெரிக்காவின், டிபிஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
*நாட்டில் போதிய அளவில் அன்னிய செலாவணி கையிருப்பில் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


