News August 19, 2025
அதிமுகவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த செங்கோட்டையன்

அதிமுகவில் அதிரடி அரசியலை செங்கோட்டையன் தொடங்கியுள்ளார். அந்தியூரில் இன்று 100-க்கும் அதிகமான மாற்று கட்சியினரை அதிமுகவில் இணைத்துள்ளார். இதன் மூலம் ஈரோடு தனது கோட்டை என்பதை 2026 தேர்தலில் நிரூபிக்க, செங்கோட்டையன் ஆட்டத்தை தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். EPS உடன் அதிருப்தி, பாஜகவில் இணைய உள்ளார் என்ற வதந்திகளுக்கு எல்லாம் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். உங்கள் கருத்து?
Similar News
News January 16, 2026
சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சென்னையில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News January 16, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 16, 2026
ஈரானில் 12,000 பேர் பலி.. நாடே சோகத்தில் ஆழ்ந்தது!

ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனதை உலுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை வாங்க வேண்டும் அல்லது வெகுஜன புதைகுழியில் புதைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


