News September 5, 2025

செங்கோட்டையன் மனம் திறக்கவில்லை: திருமா

image

செங்கோட்டையன் சொன்னது போல் முழுமையாக, மனம் திறந்து பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி பேச விரும்பவில்லை, ஆனாலும் அவர் இன்னும் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம் எனவும் கூறியுள்ளார். பெரியார் இயக்கம் என்ற முறையில் விசிக, அதிமுகவை பெரிதும் மதிக்கிறது என்றார்.

Similar News

News March 10, 2026

புதுவை: பெண் காவலர் மீது தாக்குதல்!

image

பெரியகடை காவல் நிலைய காவலர் ஜெய்சூர்யா. இவர் புதுவை கடற்கரை பாதுகாப்பு பணிக்கு சென்றபோது நேரு சிலை அருகே கடைக்காரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த ஜெயசூர்யாவை அங்கு கடை நடத்திவந்த சோலை நகர் மணி, அவரது மனைவி சந்தியா மற்றும் குப்பு ஆகியோர் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகடை போலீசார் மணி, சந்தியா, குப்பு ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

News March 10, 2026

சனி தொல்லையை நீக்கும் வெற்றிலை பரிகாரம்!

image

சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வெற்றிலை வழிபாடு உதவும். ஒரு தட்டில் 2 வெற்றிலை, 3 பாக்குகள், 11 நாணயங்களை வைக்கவும். அதன் முன், நெய்யில் தீபம் ஏற்றி வையுங்கள். இயன்ற ஒரு பொருளை நைவேத்தியமாக படைக்கவும். வடக்கு திசை பார்த்தவாறு ‘ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமியில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். SHARE IT.

News March 10, 2026

விஜய்க்கு அழைப்பு.. அதிரடியாக நீக்கிய நயினார்

image

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!