News October 16, 2025
செங்கோட்டையன் தூங்கிவிட்டார்: அண்ணாமலை

EPS உடன் முரண்பாட்டில் உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனும், அண்ணாமலையும் ஒரே விமானத்தில் பயணித்தது பேசுபொருளானது. இந்நிலையில், விமானத்தில் ஏறியதும் செங்கோட்டையன் தூங்கிவிட்டதாகவும் தான் புத்தகம் படித்துக்கொண்டே வந்ததாகவும் கூறிய அவர் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், கடந்த முறை விமானத்தில் செல்கையில் CM-ஐ சந்தித்தபோது, மரியாதை நிமித்தமாக பேசியதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News October 16, 2025
ஜெய்சங்கர் உடன் இலங்கை PM சந்திப்பு

இலங்கை PM ஹரினி அமரசூரிய, 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், EAM ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளிடையேயான கல்வி & திறன் மேம்பாட்டில் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து IIT டெல்லி & நிதி ஆயோக் செல்லும் அவர், அங்கு கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் ஆராயவுள்ளார்.
News October 16, 2025
“அந்த ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை”

தந்தையை கவனித்துக்கொள்ளாதவர் எப்படி தமிழ்நாட்டை காப்பார் என அன்புமணி பற்றி அமைச்சர் MRK பன்னீர்செல்வம் கூறியது 100-க்கு 100 உண்மை என ராமதாஸ் ஆமோதித்துள்ளார். அன்புமணி தலைமை பண்பு இல்லாதவர் என்ற அவர், ஐசியுவில் வைக்கும் அளவுக்கு தான் சீரியஸாக இல்லை என தெரிவித்தார். மேலும், புதிய கட்சி தொடங்கியவரை தவிர மற்ற அனைவரும் தன்னை ஹாஸ்பிடலில் சந்தித்தார்கள் எனவும் அதற்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
News October 16, 2025
10-ம் வகுப்பு தகுதியில் ராணுவத்தில் வேலைவாய்ப்பு

ராணுவ தள பணிமனைகளில் வெல்டர், கிளார்க், மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஸ்டோர் கீப்பர், ஃபிட்டர் உள்ளிட்ட 194 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ 12th/ ITI. வயது வரம்பு: 18 – 25. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, உடற்தகுதி. சம்பளம்: ₹5,200 – ₹20,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.24. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <