News August 26, 2024
கிருஷ்ணர் வேடமிட்ட Photoக்களை அனுப்புங்கள்

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட, பகவான் பூலோகத்தில் அவதரித்த நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமும், பெண் குழந்தைகளுக்கு ராதை வேடமிட்டும் பக்தர்கள் மகிழ்வர். இன்று உங்கள் குழந்தைக்கு வேடமிட்டு எடுக்கும் Photoக்களை way2tamilusers@way2news.com என்ற இ-மெயில் முகவரிக்கு இன்று மதியம் 3 மணிக்குள் அனுப்புங்கள்.
Similar News
News January 18, 2026
இன்று தை அமாவாசை.. இதை மட்டும் பண்ணாதீங்க

☆முன்னோர்களுக்கான இந்நாளில் தெய்வம் சம்பந்தப்பட்ட பூஜைகளை ஒத்தி வைப்பது நல்லது. அவற்றை மாலை நேரத்தில் மேற்கொள்ளலாம் ☆வீட்டார் அசைவம் சாப்பிடக்கூடாது ☆தர்ப்பணம் செய்ய வேண்டிய பொருள்களை பிறரிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது. இயன்றவற்றை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம் ☆வீட்டு வாசலில் கோலமிடக்கூடாது ☆இந்நாளில் கோபம், அவதூறு வார்த்தை பேசுதல், எதிர்மறையாக பேசுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. SHARE IT.
News January 18, 2026
போராட்டத்தில் குதிக்கும் புதிய சங்கம்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டாக ஜாக்டோ-ஜியோ குழு இருந்தது. இந்த குழுவின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத உறுப்பினர்களால் போட்டா-ஜியோ என்ற அமைப்பு உருவானது. இந்த 2 சங்கங்களும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது புதிதாக ஆக்டோ-ஜியோ என்ற சங்கம் உருவாகியுள்ளது. இந்த சங்கமும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
News January 18, 2026
₹900 கோடியை நெருங்கும் மது விற்பனை

பொங்கல் திருநாளையொட்டி 2 நாள்களில் (ஜன. 14,15) மட்டும் ரூ.518 கோடிக்கு மது விற்பனையானதாக தகவல் வெளியானது. 4 நாள் கொண்டாட்ட முடிவில் விற்பனை ₹900 கோடியை நெருங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பொங்கலுக்கு 4 நாள்களில் ₹725 கோடிக்கு விற்பனையானது. இந்தாண்டு மது விற்பனை விவரம் வெளியான நிலையில், பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


