News May 3, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மே 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News January 29, 2026
காலை பார்த்தால்தான் சரியாக நடக்க முடியும்: EPS பதிலடி

மோடி வந்தவுடன் சூரியன் மறைந்துவிட்டதாக EPS கூறியதற்கு, ‘மேலே பார்க்காமல் கால்களை மட்டுமே பார்த்தால் சூரியன் எப்படித் தெரியும்’ என அண்மையில் ஸ்டாலின் சாடியிருந்தார். அதற்கு, ‘காலை பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும்’ என EPS பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்து கேள்வி எழுப்பினால், அதற்கு பதிலளிக்காமல் அவதூறு பரப்புவதா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
News January 29, 2026
திமுக கூட்டணிக்கு அடிபோடும் ராமதாஸ்?

தவெகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறிய ராமதாஸ் தரப்பு, திமுகவுடனான கூட்டணிப் பேச்சை மறுக்கவில்லை. முன்னதாக, கூட்டணி பற்றி திமுக எடுக்கும் முடிவில் விசிக தலையிடாது என திருமா கூறியிருந்தார். இந்நிலையில், திருமாவுடன் தங்களுக்கு எந்தச் சண்டையும் இல்லை என்றும், விரைவில் வெற்றிக்கூட்டணி அமையும் எனவும் அருள் MLA பேசியுள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெறவே அவர் இவ்வாறு பேசுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News January 29, 2026
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


