News April 13, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News April 26, 2025
தீவிரவாதிகளுடன் தொடர்புடைய இருவர் கைது

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று குல்காமின் குயிமோ அடுத்த தொகேபரா பகுதியில் தீவிரவாதிகளுடன் தொடர்பில் உள்ள 2 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குயிமோவைச் சேர்ந்த பிலால் அகமது பட் மற்றும் முகமது இஸ்மாயில் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள், வெடி மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News April 26, 2025
மிகப்பெரிய என்கவுன்டர்.. 37 பேர் பலி?

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கர்ரேகுட்டாவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 37 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News April 26, 2025
கோடீஸ்வர யோகம்: பணம் கொட்டப் போகும் 3 ராசிகள்

வரும் மே 31 முதல் ஜூன் 29 வரை சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இதனால் 3 ராசிகள் அதிக நன்மைகள் பெறுவர்: *சிம்மம்- தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், கோடீஸ்வர யோகம், குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி *துலாம்: அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு, தொழில் முயற்சி கைகூடும், காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகும், உடல் ஆரோக்கியம் மேம்படும் *மேஷம்: பண யோகம் வரும், கோடீஸ்வர அதிர்ஷ்டம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.