News November 30, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (நவ.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News April 26, 2025
பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
News April 26, 2025
BREAKING: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்வு

தங்கம் விலை அதிகரித்தபோதிலும், வெள்ளி விலை கடந்த 2 வாரமாக மாறாமல் இருந்தது. 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.1.12 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT.
News April 26, 2025
ஐசிசி மகளிர் உலகக்கோப்பை.. பாகிஸ்தான் நிலைப்பாடு?

செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அணியின் ஓபனர் குல் ஃபெரோசா கூறியுள்ளார். இதே கருத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முன்வைத்திருந்தது. மேலும் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், பொதுவான மைதானங்களிலேயே இரு அணிகளும் பங்கேற்கும் வகையிலான ஹைபிரிட் மாடலின் படியே பாக். அணி தொடர்ந்து விளையாடவுள்ளது.