News November 29, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (நவ.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News April 25, 2025
மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூனில் விண்ணப்பம்: CM

மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த முகாம்களில், பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
News April 25, 2025
இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது. தீவிரவாத தாக்குதலால் எல்லையில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை இன்று பங்குச்சந்தைகளில் எதிரொலித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. நிதி தொடர்பான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
News April 25, 2025
பாக். வீரருக்கு அழைப்பு.. நீரஜ் சோப்ரா வருத்தம்

எனது தேசப்பற்றையே சோதிப்பது வலியைக் கொடுக்கிறது, எங்களை வேறு மாதிரி சித்தரிக்காதீர்கள் என நீரஜ் சோப்ரா என வேதனை தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாக். வீரர் அர்ஷத் நதீமை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கு நீரஜ் அழைத்திருந்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் வசைபாடினர். ஆனால், தாக்குதலுக்கு முன்னதாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் நீரஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.