News August 8, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (ஆகஸ்ட் 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News October 18, 2025
மீண்டும் கேப்டனாகும் ஸ்டீவ் ஸ்மித்

ஆஷஸ் தொடர் நவ.21-ல் தொடங்கவிருக்கிறது. இதில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதவுள்ளன. பாட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ஆஸி., அணிக்கு அவர் தலைமை தாங்குவது கடினம் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஆஸி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
News October 18, 2025
தென்மாவட்ட வீரர்களுக்கு வாய்ப்பு: மணத்தி கணேசன்

விளையாட்டில் எவ்வளவு கஷ்டப்பட்டோமோ, அதேபோல் சினிமாவிலும் நிறைய கஷ்டப்பட்டு ‘பைசன்’ படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று மணத்தி கணேசன் கூறியுள்ளார். தமிழ்நாடு கபடி டீமில் தூத்துக்குடி, நெல்லை போன்று தெற்கில் இருந்து வருபவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மணத்தி கணேசனின் கபடி பயணத்தை தழுவியே பைசன் படம் உருவாகியுள்ளது. இதற்காக மாரி செல்வராஜுக்கு நன்றியும் கூறியுள்ளார்.
News October 18, 2025
இந்த தீபாவளிக்கு இதில் சிக்காதீங்க!

‘தீபாவளி பரிசு காத்திருக்கிறது’, ‘உங்கள் பெயரில் கூப்பன் விழுந்திருக்கிறது’ போன்ற SMS வருதா? உஷார்! தீபாவளியை முன்னிட்டு இம்மாதிரியான மோசடிகள் அதிகம் நடப்பதாக காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும், சமூக வலைதள பக்கங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து மக்கள் சுய விவரங்களை பகிர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்ற விளம்பரங்களை ஆன்லைனில் நீங்கள் பார்த்தீங்களா?