News June 27, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இன்று (ஜூன் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News March 13, 2026
இதுவா இந்தியாவின் ராஜதந்திரம்? ப.சிதம்பரம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா முன்மொழிந்தாலும், போரில் மரணித்தவர்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். USA உள்பட 12 நாடுகளின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ரஷ்யா & சீனா இதற்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, எது விவேகம்? எது ராஜதந்திரம்? எது சாய்மானம் இல்லாத வெளியுறவுக் கொள்கை என்றும் அவர் கேட்டுள்ளார்.
News March 13, 2026
பெட்ரோல், கேஸ் சிலிண்டர்.. அடுத்த அதிர்ச்சி

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராகவே உள்ளதாகவும், சில கட்டுப்பாடுகள் என்பது தற்காலிகமானதே என அரசு கூறியிருந்தது. ஆனால், பெட்ரோல், டீசல் விற்பனை இருமடங்கு உயர்ந்ததால், நேற்று இரவு சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் சில பெட்ரோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், ஹோட்டல்களில் உணவு வகைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News March 13, 2026
சமையல் எண்ணெயின் விலை உயர்ந்தது

போரின் விளைவால் சமையல் எண்ணெயின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது விலை கிலோவுக்கு ₹1 – ₹4 வரை உயர்ந்துள்ளன. சன்ஃபிளவர் எண்ணெய் ₹4 உயர்ந்துள்ள நிலையில், பாமாயில் ₹2.50, கடலை எண்ணெய் ₹2, சோயாபீன் எண்ணெய் ₹1 என உயர்ந்துள்ளன. தனது வெஜிடபிள் ஆயில் தேவையில் சுமார் 90%-ஐ இந்தியா வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது.


