News May 26, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மே 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News March 5, 2026
ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளரை இறக்கிய ராமதாஸ்

ராஜ்யசபா தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸின் உதவியாளரான ப.சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமதாஸுக்கு 2 MLA-க்கள் ஆதரவு உள்ள நிலையில் இந்த வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வசமுள்ள ராஜ்ய சபா சீட்டுக்கு மனுத்தாக்கல் செய்துள்ள அன்புமணிக்கு போட்டியாகவே இந்த முடிவை ராமதாஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 5, 2026
விஜய்யின் திமுக எதிர்ப்பை பாராட்டுகிறேன்: தமிழிசை

திமுகவை விரட்ட வேண்டும் என்பது மட்டுமே தங்களின் குறிக்கோள் என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். திமுகவின் தவறுகளையும், நீட் விலக்கு, கேஸ் மானியம் உள்ளிட்ட திமுகவின் பொய் வாக்குறுதிகளை விஜய் தெளிவாக எடுத்துச் சொல்வதாகவும், அவரது திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை தான் பாராட்டுவதாகவும், மற்றபடி திமுக – அதிமுக டீலிங் என்று விஜய் விளையாட்டாக பேசி வருவதாக குறிப்பிட்டார்.
News March 5, 2026
நகைக் கடன்.. முக்கிய அப்டேட்

நகைக் கடன் பெற முயற்சிப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்த செய்தி. குறைந்த வட்டியில் கடன் பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (8.05 – 8.55%), இந்தியன் ஓவர்சீஸ் (8.20%), PNB (8.35 – 9.25%), SBI (8.70 – 9%), கனரா (8.75 – 9.25%) ஆகியவே குறைந்த வட்டி விகிதத்தில் நகைக் கடன் வழங்கி வருகின்றன. இதில், ஏதேனும் ஒன்று தேர்வு செய்து கடன் பெற்றால் வட்டி சுமை குறையும். SHARE


