News May 15, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மே 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News March 17, 2026
செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் நடைபெற்ற சிபிஐ விசாரணை முடிவடைந்தது. 6 மணி நேர விசாரணையில், கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என தவெகவினர் வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. குறிப்பாக, விஜய் பரப்புரையின் நடுவே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது தொடர்பாகவும், மக்கள் பாதிக்கபட்டது குறித்து எப்போது தகவல் கிடைத்தது; எப்போது ஹாஸ்பிடல் சென்றார் என்பது தொடர்பாகவும் கேட்கப்பட்டது.
News March 17, 2026
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மேலும் ₹4,000.. GOOD NEWS

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மாதாந்திர உதவித்தொகை ₹ 5,000 லிருந்து ₹9,000 மாக உயர்த்தப்படலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 21-24 வரை மட்டுமே இருந்த வயது 18-25-ஆக உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அதே போல, 12 மாதங்களாக இருந்த இன்டர்ன்ஷிப் காலம், 6- 9 மாதங்களாகவும் குறைக்கப்படவுள்ளதாம். விரைவில் இந்த மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
News March 17, 2026
பெண்கள் பாதுகாப்பு.. திமுகவை சாடிய அன்புமணி

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதவருக்கு எதற்கு முதல்வர் பதவி என்று அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். திமுகவினர் ஆட்சி செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்பதை TN பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இதுபோன்ற ஒரு ஆட்சியை இதுவரை பார்த்ததில்லை என்று திமுகவை கடுமையாக தாக்கினார். மேலும், இதை 3 மகள்களை பெற்ற ஒரு தந்தையாக சொல்வதாக தெரிவித்தார்.


