News January 23, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News January 9, 2026
கோவையில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: காரணம் என்ன?

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வரதலட்சுமி (23). இவருக்கு 18 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று உடல் நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் சோதனை செய்த போது குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர். பால் குடிக்கும்போது புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 9, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.9) கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹12,800-க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹1,02,400-க்கும் விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வந்த தங்க விலை, நேற்று குறைந்ததால் நகைப் பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், அடுத்த நாளே மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 9, 2026
6, 4, 6, 4, 6, 4.. சர்பராஸ் கான் சரவெடி!

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்து சர்பராஸ் கான் சாதனை படைத்துள்ளார். பஞ்சாப்புக்கு எதிரான VHT போட்டியில் மும்பை வீரர் சர்பராஸ் கான் 15 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, 20 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். குறிப்பாக அபிஷேக் சர்மா வீசிய 10-வது ஓவரில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். சூப்பர் ஃபார்மில் உள்ள அவரை CSK அணி சரியாக பயன்படுத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.


