News January 9, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன. 9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

Similar News

News January 25, 2026

கனடா மீது 100% வரி பாயும்: டிரம்ப்

image

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தால், கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அனைத்து பொருட்களுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் ஒருபக்கம் வெனிசுலா, கிரீன்லாந்து நாடுகளை கைப்பற்றி வரும் வேளையில், சீனாவுடன் அமெரிக்காவின் அண்டை நாடான கனடா ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராகி வருகிறது. எனினும் இந்த 100% வரி அமலானால் இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

News January 25, 2026

டி20 WC-ல் இருந்து பாகிஸ்தான் விலகலா?

image

வங்கதேசத்திற்கு அநியாயம் நடந்துள்ளது. ICC இரட்டை நிலைப்பாட்டுடன் இருக்க கூடாது என பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். ஒரு அணி (இந்தியா) என்ன முடிவென்றாலும் எடுக்கலாம், அதற்கு சரி என்று அனுமதிப்பீர்கள்; ஆனால் மற்றொரு அணி அதைசெய்ய அனுமதி கிடையாதா என்றும், பாகிஸ்தானும் டி20 WC-ல் இருந்து விலகுமா என்பது அரசாங்கத்தின் முடிவில் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

News January 25, 2026

TTV-க்கு 300 ‘C’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டன: புகழேந்தி

image

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அன்புமணி, தினகரன் ஆகியோருடன் ஒரு கூட்டணிக்காக PM மோடி கைகோர்க்கலாமா என முன்னாள் அதிமுக MLA புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இப்போது அதிமுக என்ற கட்சியே இல்லை; அதை EPS அணி என்றுதான் அழைக்க வேண்டும் என்றும், நேற்று EPS-ஐ, ‘அண்ணன்’ என்று அழைத்து, கூட்டணி அமைத்ததற்காக TTV தினகரனுக்கு 300 ‘சி’ சாக்லேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!