News October 10, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News October 10, 2025
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி அலர்ட்

பிலிப்பைன்ஸில் நள்ளிரவில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த செப்.30-ம் தேதி 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 74 உயிரிழந்தனர். அதேபோல், மக்களின் உடமைகளும் கடும் சேதத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
News October 10, 2025
தங்கத்திற்கு மாற்றாக தயாராக உள்ள உலோகங்கள்!

விண்ணைத் தொடும் விலை காரணமாக தங்கத்திற்கு பதிலாக வேறு எந்த உலோகத்தில் ஆபரணங்கள் செய்யலாம் என்ற ஆராய்ச்சி அதிகரித்து விட்டது. வருங்காலத்தில் இந்த உலோகங்களின் விலையும் பெருமளவு அதிகரிக்கும் என்பதால், இவற்றில் முதலீடு செய்யவும், நகைகள் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. அவை என்னென்ன என மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். SHARE IT.
News October 10, 2025
புத்துணர்ச்சிக்கு காலையில் இந்த மூலிகை தேநீர் குடிங்க!

தேநீர் பிரியரா நீங்கள்? அப்படியென்றால் ஆவாரம்பூ தேநீர் பருகிப் பாருங்கள். உடல் ஆரோக்கியத்தை பெருக்கும். ஆவாரம் பூ பொடி, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இஞ்சி, ஆவாரம் பொடி கலவையை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி குடித்தால் உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும். SHARE IT.