News October 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News October 8, 2025
விவசாயிகளை அலைக்கழிக்கும் திமுக அரசு: EPS

விவசாயிகளிடம் இருந்து உரிய காலத்தில் நெல் கொள்முதல் செய்யாமல் திமுக அரசு அலைக்கழிப்பதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். இடவசதியும், சாக்குகளும் இல்லாததால் கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகவும், இதனால் நெல் மணிகளுடன் விவசாயிகள் பல நாள்களாக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதில் போர்க்கால நடவடிக்கை எடுத்து கொள்முதல் செய்வதுடன், விவசாயிகள் கணக்கில் பணத்தை விரைந்து செலுத்தமாறு வலியுறுத்தியுள்ளார்.
News October 8, 2025
மல்யுத்த சாம்பியன் அமன் ஷெராவத் இடைநீக்கம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்தை இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப், 57 கிலோ எடைப்பிரிவில் அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1.7 கிலோ எடை கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக, அமன் ஷெராவத் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை எனக் கூறி மல்யுத்த சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
News October 8, 2025
மத்திய அரசு பள்ளிகளில் 7,267 காலிபணியிடங்கள்..

கல்வி அமைச்சகத்தில் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 7,267 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர், ஸ்டாப் நர்ஸ், ஹாஸ்டல் வார்டன் பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்ட நபராக இருக்க வேண்டும். கல்வி தகுதி: 10-ம் வகுப்பு முதல் துறை சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்கள் https://nests.tribal.gov.in/ தளத்தில் வரும் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.