News October 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News October 7, 2025
விஜய் ரசிகர்களுக்கு பொண்ணு கொடுக்காதீங்க: வீரலட்சுமி

கரூர் துயரத்திற்கு விஜய் ரசிகர்களே காரணம் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் துயரத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் தமிழக மக்கள் விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்க மற்றும் வீட்டில் பெண் எடுக்க கூடாது, யாரும் அவர்களை காதலிக்காதீர்கள் என்றும் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். விஜய்யை போல அவரது ரசிகர்களும் தவறான செயல்களிலேயே ஈடுபடக் கூடியவர்கள் என்று அவர் சாடியுள்ளார்.
News October 7, 2025
‘AK64’ ஷுட்டிங் விரைவில் தொடக்கம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் AK64 படத்தின் ஷுட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
News October 7, 2025
CJI மீதான தாக்குதல் முயற்சிக்கு CM ஸ்டாலின் கண்டனம்

CJI பி.ஆர்.கவாய் மீதான தாக்குதல் முயற்சிக்கு CM ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நம் சமூகத்தில் அடக்குமுறை மற்றும் அதிகார மனநிலை இன்னும் எந்தளவு ஆழமாக நீடிக்கிறது என்பதை தாக்குதலுக்கான காரணம் வெளிப்படுத்துவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், நாட்டின் ஜனநாயக அமைப்புகளை மதித்து பாதுகாக்கும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.