News October 2, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

Similar News

News October 2, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 476 ▶குறள்: நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். ▶பொருள்: ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

News October 2, 2025

இந்தியா வேண்டாம்: கடிதம் எழுதிய பாக்.,

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்தியா – பாக்., மோதும் விளையாட்டு போட்டிகள் இருநாடுகளை தவிர பிற நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பாக்., வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பிற்கும் பாக்., கடிதம் எழுதியுள்ளது. இரு அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் துபாயில் நடைபெற்றது.

News October 2, 2025

கார்கேவுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தம்

image

காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இன்று உடல்நலக் குறைவு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு இதயத் துடிப்பை சீராக்கும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக, அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள M S ராமய்யா ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள அவரது உடல்நலம் சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!