News September 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
Similar News
News September 6, 2025
அஜித் படத்துக்கு எதிராக இளையராஜா வழக்கு

அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில், இளையராஜா இசையில் வெளியான பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. இதை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக ₹5 கோடி இழப்பீடு கேட்டு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாடல் உரிமையாளரிடம் அனுமதி பெறப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனம் பதிலளித்தது. இந்நிலையில், HC-ல் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த உரிமையாளர் யார் என்றும் அவர் கேட்டுள்ளார்.
News September 6, 2025
கண்ணதாசன் பொன்மொழிகள்

*தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
*யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.
*அழும் போது தனிமையில் அழு, சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி, கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.
News September 6, 2025
ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு 10:55 மணிக்கு 5.0 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், மேலும் ஏதும் பாதிப்புகள் இல்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதுவரை 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.