News August 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News August 28, 2025
4 பேரின் உயிரை காவு வாங்கிய கூகுள் மேப்

வாகன ஓட்டிகளுக்கு பெரும் வரப்பிரசாதம் என்றால் அது கூகுள் மேப் தான். ஆனால் சில சமயங்களில் அது நமக்கு எமனாகவும் மாறுவதுண்டு. அப்படி சோகமான சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ஆன்மிக சுற்றுலா முடிந்து 9 பேர் காரில் வீடு திரும்பியுள்ளனர். கூகுள் மேப் துணையுடன் சென்ற டிரைவருக்கு செயல்படாத பாலத்தை மேப் காட்டியுள்ளது. கடைசியில் கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 4 பேர் பலியாகினர்.
News August 28, 2025
பஞ்சாப் பல்கலை.,யில் அமெரிக்க பொருள்களுக்கு தடை

இந்திய பொருள்களுக்கு 50% வரிவிதித்தற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பஞ்சாபில் உள்ள Lovely Professional University அதன் அனைத்து கேம்பஸ்களிலும் அமெரிக்க குளிர்பானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதை அப்பல்கலை.,யின் வேந்தரும், ஆம் ஆத்மி MP-யுமான அஷோக் குமார் மிட்டல் அறிவித்துள்ளார். இந்தியா எந்த ஒரு அந்நிய சக்திக்கும் அடிபணியாது என இதன் மூலம் செய்தி அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News August 28, 2025
எம்.ஜி.ஆர். பொன்மொழிகள்

*கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை
*புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது; அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்
*உள்ளத்தில் உள்ள லட்சியத்திற்காக இறுதிவரை பாடுபட வேண்டும்
*நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நமக்குப் புரியாமல் போய்விடும்
*சுயநலமில்லாத நம்பிக்கை வெற்றி பெறும்
நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது, நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.