News August 23, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News March 24, 2026
அமெரிக்காவுடனான ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். போர் பதற்றங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து அவர்கள் விவாதித்தனர். குறிப்பாக எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தினர். போரை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றன.
News March 24, 2026
மோடி விரைவில் ரஷ்யாவுக்கு பயணம்

PM மோடி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இந்தியா – ரஷ்யா சர்வதேச மாநாட்டில் பேசிய அவர், மோடியை வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக கூறினார். மேலும், காலத்தால் அழியாத இரு நாடுகளின் நட்புறவை அவர் பாராட்டினார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஷ்ய அதிபர் புடின் 2 நாள்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 24, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 642 ▶குறள்: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. ▶பொருள்: ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.


