News August 20, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News August 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 433 ▶குறள்: தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். ▶ பொருள்: பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
News August 20, 2025
செல்வத்தை ஈர்க்கும் தாமரை மணிமாலை

மகாலட்சுமி வீற்றிருப்பதாக கூறப்படும் தாமரையில் உள்ள விதைகளைக் கொண்டு செய்யப்படும் மாலையான தாமரை மணிமாலைக்கு தெய்வீக குணம் உண்டு என்று ஆன்மிகம் கூறுகிறது. அந்த மாலை ஓரிடத்தில் உள்ளதெனில் அங்கு மகாலட்சுமி வருவார் எனவும், தாமரை மணிமாலை செல்வத்தை ஈர்க்கும், தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கையை அளிக்கும், நேர்மறை சக்தியை அளிக்கும் என்றும் ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
CM ஸ்டாலின் முடிவே என் முடிவு: கமல்ஹாசன்

துணை ஜனாதிபதி தேர்தலுக்காக NDA கூட்டணி சார்பில் CPR-யும், இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவை சேர்ந்த சுதர்சன ரெட்டியும் நிறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த CPR தேர்தலில் போட்டியிடுவதால் தமிழக எம்.பிக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்புள்ளது. இதுபற்றி பேசிய கமல்ஹாசன், துணை ஜனாதிபதி தேர்தலில் CM ஸ்டாலின் முடிவுதான் எனது முடிவு என கூறியுள்ளார்.