News August 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News August 18, 2025
தி.மலை: ஆமை கறி சமைத்தவர்கள் கைது

தி.மலையை சேர்ந்த அஜித், குமார் இருவரும் நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 8ம் தேதி ப.வேலுார் காவிரி கரையோரம், ஒன்பது ஆமைகளை பிடித்து மருத்துவ குணங்களுக்காக எரித்துள்ளனர். இதை விடியோவாக சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில், வனத்துறையினர் இருவரையும் கைது செய்து 1 லட்சம் அபராதம் விதித்தனர்.
News August 18, 2025
11 விநாயகர் சபை இருக்கும் அதிசய கோயில்!

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் வாசீஸ்வரர் திருத்தலத்தில் ‘11 விநாயகர் சபை’ உள்ளது. புராணங்களின்படி, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டதால், வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்தது. விநாயகர் சபை அமைத்தும் விசாரணை மேற்கொண்டாராம். அதனடிப்படையில்தான், இங்கு 11 விநாயகர் சபை உள்ளது. இக்கோயிலில் வந்து வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
News August 18, 2025
மிஸ்ஸான ஹாலிவுட் வாய்ப்பு: ஃபஹத் சொன்ன காரணம்

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் இயக்குநர் Alejandro González Iñárritu-வின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து ஃபஹத் பாசில் பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், தான் வீடியோ காலில் ஆடிஷன் செய்தபோதே அவருக்குப் பிடிக்கவில்லை என்றார். இதற்கு தனது ஆங்கில உச்சரிப்பே காரணம் என்ற அவர், சம்பளமே இல்லாமல் 4 மாதங்கள் USA-ல் இருக்கச் சொன்னதால், அப்படத்தை கைவிட முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.