News August 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News August 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 428 ▶குறள்: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். ▶ பொருள்: அறிவில்லாதவர்கள் தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.
News August 15, 2025
இதை செய்யாமல், கூலி படத்தை CM பார்க்கிறார்: சீமான்

கூலிக்காக போராடும் மக்களை பற்றி கவலைப்படாமல், கூலி படத்தை CM ஸ்டாலின் பார்க்கிறார் என சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் கைதான தூய்மை பணியாளர்களை நேரில் சென்று சந்தித்த சீமான் அதன்பின் பேட்டியளித்தார். அப்போது, மக்களை பற்றி சிந்திக்காதவர்களை தேர்வு செய்தது மக்களின் தவறு என்றார். நாட்டை தூய்மையாக வைத்திருப்பது அரசின் பொறுப்பா அல்லது தனியார் பொறுப்பா எனவும் கேள்வி எழுப்பினார்.
News August 15, 2025
இடஞ்சுழி எழுத்துகள் தெரியுமா?

ட, ய, ழ ஆகியவை இடஞ்சுழி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை எழுதும்போது கையை இடதுபுறமாக வளைத்து (அ) சுழித்து எழுதுவதால் இடஞ்சுழி எழுத்துகளாகும். மாறாக இடதுபக்கம் இருந்து வலப்பக்கம் சுழித்து எழுதப்படுபவை வலஞ்சுழி எழுத்துகளாகும். உ-ம்: அ, எ, ஔ, ண, ஞ ஆகியவை. தமிழ் எழுத்துகளில் பெரும்பாலானவை வலஞ்சுழி எழுத்துகளாகவே உள்ளன. உ-ம்: அ, ஆ, இ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஓ, ஒள, க, ச, ஞ, ண, த, ந, ம, ல, வ, ழ,ள, ன.