News August 6, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News August 6, 2025
அதி நவீன ஏவுகணைகளை களமிறக்க முடிவு

ஆபரேஷன் சிந்தூரின் போது நமது பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால், இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்கு அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சக உயர்மட்ட குழு விரைவில் கூட உள்ளது. இந்தியா – ரஷ்யா கூட்டு தயாரிப்பில் இந்த ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன.
News August 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கேள்வி ▶குறள் எண்: 419 ▶குறள்: நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. ▶பொருள்: தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
News August 6, 2025
2035-ல் நிலவிற்கு செல்லும் பாகிஸ்தான்!

சீன ஆதரவுடன் 2035-ல் நிலவில் தரையிறங்க பாக்., தயாராகி வருகிறது. அதேபோல், 2026-ல் சீன விண்வெளி மையத்திற்கு தங்களது விண்வெளி வீரரை அனுப்பவும் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாக்., அமைச்சர் அஷான் இக்பால், சீனாவில் ஆராய்ச்சியாளர்களுடன் பேசிவருகிறார். ஆனால், பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி மையமான SUPARCO இதுவரை ஒரு செயற்கைக்கோளை கூட பிற நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் விண்ணில் ஏவியது இல்லை.