News January 1, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

2025 புத்தாண்டின் முதல்நாளான இன்று (ஜன.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News October 19, 2025
இன்று IND vs AUS: பட்டாசாய் வெடிக்கப்போகும் களம்

AUS-க்கு எதிரான முதல் ODI போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு ரோஹித், கோலி விளையாட உள்ளதால், இப்போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், ODI கேப்டனாக கில் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் போட்டி இதுவாகும். IND vs AUS இதுவரை 158 ODI போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் AUS – 84, IND – 58 போட்டிகளிலும் வென்றுள்ளன. 10 போட்டிகள் டை ஆகியுள்ளன.
News October 19, 2025
விஜய்யை சந்திக்க விரும்பும் வெளிநாட்டு தூதர்கள்

இந்தியாவில் நடக்கும் தேர்தல்கள் தொடர்பாக இங்குள்ள வெளிநாட்டு தூதரகங்கள் தங்கள் நாடுகளுக்கு அறிக்கை அனுப்புவது வழக்கம். அந்தவகையில், புதிதாக கட்சி துவங்கியுள்ள விஜய்யை நேரில் சந்தித்து, அவரது கொள்கைகள், CM ஆனால் என்ன செய்வார் உள்பட பலவற்றை அறிந்து கொள்ள வெளிநாட்டு தூதர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கு அனுமதிக்க கோரி, மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுத்தியுள்ளனராம்.
News October 19, 2025
8 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.