News April 22, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News November 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 511 ▶குறள்: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். ▶பொருள்: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.
News November 6, 2025
கோவை பாலியல் கொடூரம்.. மதுவிலக்கு கோரும் திருமா

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த மதுவிலக்கை TN அரசு அமல்படுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கோவை மாணவி கூட்டு பாலியல் கொடூரமானது, பெண்கள் பாதுகாப்பில் அரசு கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம் என்பதை உணர்த்துவதாக X-ல் அவர் தெரிவித்துள்ளார். அதிக மது அருந்துவதில் இந்தியாவிலேயே TN 2-வது மாநிலமாக இருப்பதாகவும், 12% குடிநோயாளிகளாக உள்ளது கவலையை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News November 6, 2025
விஜய்க்கு குற்ற உணர்ச்சியே இல்லை: வைகோ

கரூர் துயரில் குற்ற உணர்ச்சியே இல்லாமல் விஜய் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது தவறான போக்கு என வைகோ விமர்சித்துள்ளார். 41 பேர் உயிரிழப்பில் முழு பொறுப்பேற்க வேண்டிய விஜய் கண்ணியமற்ற வகையில் CM மீது வெறுப்பை கொட்டித் தீர்த்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத விஜய், ஆட்சிக்கு வந்தது போல் கற்பனை வாழ்வில் திளைக்கிறார் என்றும் வைகோ கூறியுள்ளார்.


