News April 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News April 19, 2025
10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு.. கல்வித்துறை முக்கிய தகவல்

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்து விடைத்தாள்கள் திருத்தும் பணிகளும் முடிவடைந்துள்ளது. 10-ம் வகுப்புக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் வரும் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில், திட்டமிட்டபடி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 9-ம் தேதியும், 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதியும் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
News April 19, 2025
குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்த கவர்னர் ஆர்.என்.ரவி!

டெல்லியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ஜெகதீப் தன்கர் விமர்சித்திருந்த நிலையில், ஆர்.என்.ரவி திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
News April 19, 2025
நடிகர் பாபி சிம்ஹாவின் கார் விபத்து!

சென்னையில் விபத்தை ஏற்படுத்திய நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகர் பாபி சிம்ஹாவின் டிரைவர் புஷ்பராஜ் ஓட்டிய கார் சாலையில் சென்ற 6-க்கும் மேற்பட்ட வாகனங்களை இடித்து சேதப்படுத்தியது. இதில் பெண் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் டிரைவர் புஷ்பராஜை கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். மதுபோதையால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.